Monday Dec 09, 2024

திருத்தலையாலங்காடு ஸ்ரீநர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு நர்த்தனபுரீஸ்வரர் திருக்கோயில், தலையாலங்காடு-612 603 சிமிழி போஸ்ட், செம்பங்குடி வழி, குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 269 235, +91- 94435 00235.

இறைவன்

இறைவன்: நர்த்தனபுரீஸ்வரர் ( ஆடவல்லார்), நடனேஸ்வரர் இறைவி: பாலாம்பிகை, உமாதேவி

அறிமுகம்

திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 93ஆவது சிவத்தலமாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், கும்பகோணம்-திருவாரூர் பேருந்து சாலையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முயலகனை அடக்கி அவன் முதுகை நெரித்து இறைவன் நடனமாடினான் என்பது தொன்நம்பிக்கை. கபில முனிவர் வழிபட்ட திருத்தலம். இத்தலத்து தீர்த்தம் நோய் தீர்க்கும் சிறப்புடையது.

புராண முக்கியத்துவம்

தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை அழிப்பதற்காக வேள்வி ஒன்றை நடத்தினார்கள். அதில் தோன்றிய யானையின் தோலை சிவன் உரித்தார். மானை தன் கையில் ஏந்திக்கொண்டார். முயலகன் என்ற அரக்கனை அழித்து அவனது முதுகின் மீது ஏறி நர்த்தனம் ஆடிய தலம் இது. கபில முனிவர் பூஜித்த தலம்.சங்க காலத்தில் இத்தலத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழ் வேந்தர் இருவருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இதில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றிபெற்றான். அவனுக்கு தலையானங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது. சிறிய ஊர், கோயில் தெற்கு நோக்கியது. சுவாமி அம்பாள் கோயில்கள் மட்டுமே உள்ளன. சுவாமி சன்னதியில் விநாயகர், விசுவநாதர், தலவிநாயகர், முருகன், பைரவர், நால்வர் சன்னதிகள் உள்ளன. மூலவர் அழகான மேனி. அம்பாள் தெற்கு நோக்கிய சன்னதி. இக்கோயில் “எண்கண்’ கோயிலுடன் இணைந்தது. அருமாமையில் எண்கண், குடவாயில் பெருவேளூர், முதலிய திருமுறைத் தலங்களும், மணக்கால், காட்டூர் முதலிய வைப்புத் தலங்களும் உள்ளன.

நம்பிக்கைகள்

வெண்குஷ்டம் உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்தால் விரைவில் குணமாகும், என்பதும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி பிரார்த்தித்தால் சிறந்த பலன் உண்டு என்பதும் நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 156 வது தேவாரத்தலம் ஆகும். கோயிலின் முன்பு தீர்த்தம் உள்ளது. இது மிகவும் விசேஷமானது. இதில் நீராடி இறைவனுக்குத் தீபமிட்டு உறுதியுடன் வழிபட்டால் வெண்குஷ்டநோய் நீங்கபெறும் என்பது இன்றும் மக்களின் அசையாத நம்பிக்கையாகும்.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருத்தலையாலங்காடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top