Tuesday Dec 03, 2024

கும்பகோணம் ஆதிகம்பட்டவிஸ்வநாதர் திருக்கோயில்

முகவரி :

அருள்மிகு ஆதிகம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்,

கம்பட்ட விஸ்வநாத கீழவீதி,

கும்பகோணம் மாவட்டம் – 612001.

இறைவன்:

ஆதிகம்பட்ட விஸ்வநாதர்

இறைவி:

ஆனந்தநிதி

அறிமுகம்:

இந்த தலம் கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாத கீழவீதியில் உள்ளது. கம்பட்டம் என்ற சொல்லுக்கு தங்கச்சாலை என்று பொருள். ஒரு காலத்தில் இந்த இடத்தில்தான் பொற்காசு அடிக்கும் நிலையங்கள் இருந்தன. தஞ்சையையும் பழையாரையும் தலைநகரங்களாக கொண்டு ஆண்டுவந்த சோழ மன்னர்கள் இந்த இடத்தில்தான் நாணயம் தயாரிக்கும் நிலையங்களை அமைத்தனர். தங்க காசுகள் இங்கு உருவாக்கப்பட்டன. இவ்வகையில் இதனை தமிழகத்தின் நாசிக் என்றுகூட அழைக்கிறார்கள்.

புராண முக்கியத்துவம் :

 கும்பகோணம் ஒரு காலத்தில் மாலதிவனமாக இருந்தது. மாலதி என வழங்கப்படும் மரங்கள் அடர்ந்திருந்தன. உதயகிரியில் நிசாசரா என்ற தபஸ்வி வசித்தார். அவரது மகனான தூமகேது மிகப்பெரிய ஆசிரியர். பல கலைகளை கற்றவர். இவரிடம் பாடம் படிக்க வேண்டுமானால் மாணவர்கள் போட்டிபோட்டு செல்வார்கள்.

தூமகேதுவை சுற்றி மாணவர் கூட்டம் மொய்த்துக் கொண்டே இருக்கும். அவர் என்ன சொன்னாலும் மாணவர்கள் அப்படியே கேட்பார்கள். இதன் காரணமாக படிப்பில் கவனம் அதிகமாகி கலைகளில் சிறந்து விளங்கினார்கள். மிகச்சிறப்பாக படிக்கும் மாணவர்களை தூமகேது சுற்றுலா அழைத்துத்ச்செல்வார். சிவாலயங்களுக்கு செல்வது அவரது வழக்கம். அக்கோயிலின் அமைப்பு, தல வரலாறு, சிவ வழிபாட்டின் மகிமை ஆகியவற்றை செய்முறை விளக்கங்களுடன் கற்றுக்கொடுப்பது வாடிக்கையாக இருந்தது. அவ்வாறு அவர் வந்த தலங்களில் ஒன்றே ஆதிகம்பட்ட விஸ்வநாத கோயிலாகும். இவரது ஆசிரிய பணியை மெச்சிச் இறைவனே அவருக்கு காட்சி கொடுத்தார். ஆனந்தமயமான அந்த காட்சியைக்கண்ட தூமகேது இறைவனுக்கு விசுவேசர் என்றும், அம்பாளுக்கு ஆனந்தநிதி என்றும் பெயர்சூட்டினார். அவ்விடத்தில் இருந்த தீர்த்தத்திற்கு தூமகேது தீர்த்தம் என்று இறைவன் பெயர்சூட்டினார்.

நம்பிக்கைகள்:

மாணவர்கள் மட்டுமின்றி, தங்க நகை தொழில் செய்பவர்களும் இவரை வணங்கி தொழில் மேன்மை பெறலாம்.

திருவிழாக்கள்:

மகாமக தினத்தன்று ஆதிகம்பட்ட விஸ்வநாதர் அம்பாளுடன் மகாமக குளத்திற்கு எழுந்தருள்கிறார். இதுதவிர, சிவனுக்குரிய அத்தனை விழாக்களும் இங்கு நடத்தப்படும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top