போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில், தேனி

முகவரி :
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில்,
7/1, பங்கஜம் நகர்,
போடிநாயக்கனூர்,
தேனி மாவட்டம் – 625513.
தொலைபேசி எண் : 04546246242
இறைவன்:
பரமசிவன்
அறிமுகம்:
போடிநாயக்கனூர் பரமசிவன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்தின் போடிநாயக்கனூர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயிலில் மூலவர் பரமசிவன் மற்றும் உற்சவர் பரமேசுவரன் ஆவர். இக்கோயிலின் தலவிருட்சம் வேம்பு மரம்; தீர்த்தம் விசுவபிராமண தீர்த்தம் ஆகும். சிவாகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகின்றன. பரமசிவன், பரமேசுவரன், இலட்சுமி நரசிம்மர், செல்வ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.
புராண முக்கியத்துவம் :
இத்திருக்கோயில் பாலகுருசாமி என்ற சிவபக்தர் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு காசி, இராமேஸ்வரம் போன்ற புண்ணியதலங்களுக்கு சென்றதன் பயனாக அவருக்கு ஆண் குழந்தை பிறந்து அக்குழந்தைக்கு பாலாபிஷேகன் என பெயரிட்டு சிறப்புடன் வளர்த்து வந்தார். சிவ தொண்டையே உயிராக கொண்டிருந்த தனது மகன் இறந்ததை கண்டு மனம் நொந்து கடவுள் இல்லை என்று தனது வீட்டிலிருந்த பூஜை சாமான்களை ஆற்றில் விட முடிவு செய்தார். இந்நிலையில் இரவில் ஒரு கனவு கண்டார்.ஊருக்கு மேற்கே தற்போது திருக்கோயில் அமைந்துள்ள குன்றில் துறவி ஒருவர் இருப்பது போலவும், அவருக்கு அருகில் தன மகன் படுத்திருப்பது போலவும் தெரியவர உடனே அக்குன்றுக்கு சென்று தன் மகனை அழைத்த போது அவன் வர மறுத்துவிடுகிறான். அத்துறவி இவண் என்னிடமே இருந்து எனக்கு சேவை செய்யட்டும் உனக்கு வேறு மகன் பிறப்பான் என்கிறார். அதற்கு நீங்கள் யார் என கேட்க அத்துறவி மறைந்து சிவண் .பார்வதி சமேதராக காட்சி தந்தார். அத்துடன் மலையின் தென்மேற்கு பகுதியில் ஜோதி வடிவமாக காட்சியளித்தார். சிவணும் பார்வதியும் காட்சி கொடுத்த இடத்தில் இத்திருக்கோயிலை கட்டினார். அதன் பின்பு சிவண் அருளால் அவருக்கு ஐந்து ஆண்குழந்தைகள் பிறந்ததாக தெரியவருகிறது.
நம்பிக்கைகள்:
இத்திருக்கோயிலில் ஆண் குழந்தை வேண்டுபவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வேண்டி கொண்டால் வரம் கிடைக்கின்றது. குழந்தை வரம் கிடைத்ததும், இவ்வாலயம் சென்று அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தங்கள் குழந்தையை போட்டு வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.ஆண் குழந்தை வரம் வேண்டுவோருக்கு இக்கோயில் ஒரு வரப்பிரசாதம் ஆகும்






காலம்
75 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
போடிநாயக்கனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
போடிநாயக்கனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை