Sunday Jul 21, 2024

ஸ்ரீ காளிகாம்பாள் சமதே கமடேஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி

ஸ்ரீ காளிகாம்பாள் சமதே கமடேஸ்வரர் திருக்கோயில், தம்பு செட்டி தெரு, மன்னடி, பிராட்வே, சென்னை – 600001.

இறைவன்

இறைவன்: கமடேஸ்வரர் இறைவி: காளிகாம்பாள்

அறிமுகம்

சென்னையில் ‘யாதுமாகி நின்றாய் காளி’ என்று மகாகவி பாரதியார் போற்றிப் பாடிய அம்பாள் காளிகாம்பாள். சென்னை காளிகாம்பாள் கோவிலில் ஜகன்மாதா எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவதில் காமாட்சியம்மன்… தீயவர்களை அழிப்பதில் காளிகாம்பாள்… எனும் திருநாமத்துடன் அருள்புரிகிறார். புவனேஸ்வரியாக, ராஜராஜேஸ்வரியாக, ராஜமாதங்கியாக, காமாட்சியாக, பத்ரகாளியாகப் பல்வேறு வடிவங்களிலும் பக்தர்களுக்கு அருளாசி தருகிறாள்.

புராண முக்கியத்துவம்

கி.பி.1640ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையின் உட்பகுதியில் இத்திருக்கோயில் ஆரம்பத்தில் அமைந்திருந்தது. ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் பிரம்மஸ்ரீ முத்துமாரி ஆச்சாரி என்பவரால் தம்புசெட்டித் தெருவிற்கு கோயில் இடமாற்றம் செய்யப்பட்டு வழிபாடுச் செய்யப்பட்டு வருகிறது. புராண வரலாற்றில் பரதபுரி, சுவர்ணபுரி என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீ காளிகாம்பாள், பழங்காலத்தில் மீனவர்களும் மற்றவர்களும் செந்தூரம் சாற்றி வழிபட்டதால் சென்னியம்மன் என்ற பெயரும், நெய்தல் நில காமாட்சி என்ற பெயரிலும் ஸ்ரீ காளிகாம்பாள் அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியே ஸ்ரீ காளிகாம்பாளின் 12 அம்சங்களுள் ஒன்றாகும் என்பதை நினைவூட்டும் வகையில், மேற்கு நோக்கி அர்த்த பத்மாசனத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ காளிகாம்பாள் பாதத்தை நோக்கி அர்த்தமேரு சக்கரம் அமைந்துள்ளது.

நம்பிக்கைகள்

திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீகாளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து அந்த மஞ்சளை பயன்படுத்துவது மிகுந்த பலனை தரும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதை விளக்காக பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. மேலும், மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடுவதாக கூறப்படுகிது. இவ்வாலயத்தில் அமைந்திருக்கும் அகோர வீரபத்ர சுவாமிக்கு பவுர்ணமி நாளன்று வெற்றிலை, மாலை வைத்து வழிபட்டால் பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்றவை எது பற்றியிருந்தாலும் உடனே விலகிவிடும் என்கிறார்கள் ஆலய அர்ச்சகர்கள். அம்பாளை வேண்டுவதன் மூலம் திருமணத்தடை நீங்குகிறது. அதனால் நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளை வண்ங்கிவிட்டு அவள் பாதத்தில் வைத்து எடுத்த மஞ்சளை தினமும் வெறும் வயிற்றில் பச்சைத் தண்ணீரிணீல் கலந்து உட்கொண்டு வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது. அப்படி புத்திர பாக்கியம் பெற்றவர்கள் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்து வருகிறார்கள்’’ என்கிறார்.

சிறப்பு அம்சங்கள்

பிருங்கி மகரிஷி, பராசரர், வியாசர், அகத்தியர், ஆங்கிரேசர், புலஸ்தியர் ஆகிய முனிவர்களும், இந்திரன், வருணன் ஆகிய அஷ்டதிக்கு பாலகர்களும், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் ஆகிய நவக்கிரகங்களும், ஆமைவடிவில் கமடேஸ்வரராக திருமாலும் அன்னையை இத்திருக்கோயிலில் வழிபட்டுள்ளனர். குபேரன் இத்திருத்தலத்திற்கு வந்து அம்பாளை வழிபட்ட பின்னரே அவருக்கு செல்வம் அதிகரித்தது என்ற செய்திகளும் உண்டு. மேலும், மராட்டிய சிங்கம் சத்ரபதி சிவாஜி 1677-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் திகதி அன்று ஸ்ரீகாளிகாம்பாளை வழிபட்ட பின்னரே சிவாஜி தன்னை சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது வரலாறு. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் “யாதுமாகி நின்றாய் காளி” என்று தான் எழுதிய பாடல் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை மனதில் வைத்து எழுதப்பட்டதாகும்.

திருவிழாக்கள்

சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி, சித்ரா பவுர்ணமி, வைகாசியில் பிரம்மோற்சவம், ஆடியில் வசந்த உற்சவம், வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், ஆடிக்கிருத்திகை, ஆவணியில் விநாயக சதுர்த்தி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, ஐப்பசியில் கமடேஸ்வரர் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம், கந்த சஷ்டி உற்சவம், கார்த்திகையில் சோமவார உற்சவம், கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழியில் மாணிக்கவாசகர் உற்சவம், நடராஜர் ஆருத்ரா தரிசனம், அம்பாளின் தீர்த்தவாரி, தை மாதத்தில் புஷ்பாஞ்சலி, வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம், மகுடாபிஷேகம் ஆகியவை இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சென்னை செண்ட்ரல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பிராட்வே

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top