Sunday Dec 08, 2024

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், பனையபுரம் அஞ்சல் – 605 603 (வழி) முண்டியம்பாக்கம், விழுப்புரம் மாவட்டம். போன்: +91-99420 56781

இறைவன்

இறைவன்:பனங்காட்டீஸ்வரர் இறைவி: சத்யாம்பிகை, புறவம்மை

அறிமுகம்

பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்திற்கு 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1] சென்னையிலிருந்து வரும்போது தே.நெ 45 (சென்னை-திருச்சி நெடுஞ்சாலை) சாலையில் இருந்து விழுப்புரம் செல்ல பிரியும் சாலையில்(தே.நெ 45 சி ) 1.1 கி.மீ தொலைவில் பனையபுரம் உள்ளது.

புராண முக்கியத்துவம்

சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செயத் வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அகோர வீரபவீ த்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றார். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார்பனங்காட்டூரும் ஒன்றாகும்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

சூரியன் வழிபட்ட தலம். வெளிப்பிரகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சன்னதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனைமரங்கள் மூன்று உள்ளன. அம்பாள் சன்னதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நின்ற திருக்கோலம். துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். துவாரகணபதியையும், தண்டபாணியையும் தொழுது உட்சென்று சத்யாம்பிகையைத் தரிசிக்கலாம். நவக்கிரகம் தொழுது, வலம் முடித்து, கொடிக் கம்பம் வணங்கி, வாயில் நுழைந்தால் சுவாமி சந்நிதியை அடையலாம். உள்பிரகாரங்களில் விநாயகர், ஆறுமுகர், சனிபகவான், நவக்கிரகம், சூரியன், 63 நாயன்மார்கள், சப்தமாதர்கள், இடபாரூடர், திருமால், கஜலஷ்மி, நால்வர், பிக்ஷடனர், தெட்சிணாமூர்த்தி, பிரம்மா, இலிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் முதலிய சன்னிதிகள் உள்ளன. இவற்றுள் திருநீலகண்டர் தம்மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு மிகவும் அரிதான காட்சியாகும். பனையைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் ஐந்தனுள் இதுவும் ஒன்று. பிறதலங்களினின்றும் வேறுபாடறிவதற்காக- காடுகளால் சூழ்ந்த பகுதியாக இத்தலம் விளங்கியமையின் (புறவு: சோலை, காடு) “புறவார் பனங்காட்டூர்’ என்றழைக்கப்பட்டது. முல்லை நிலக் காடுகளால் சூழப் பெற்று இத்தலம் விளங்கியதால் புறவார் பனங்காட்டூர் என வழங்கப்படுகிறது. சிபிச்சக்ரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காத்தற்காகத் தன் கண்களைப் பறித்தளிக்க, இறைவன் அம்மன்னனின் கடமை உணர்வை அறிந்து காட்சிதந்து இழந்த கண்களை மீண்டும் அருளினார். அதனால் இத்தலத்து இறைவனுக்கு கண்பறித்து அருளிய கடவுள் என பெயர் ஏற்பட்டது.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top