Monday Sep 16, 2024

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில்

முகவரி

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், அனுமன் கோயில் தெரு, பழனியப்பா காலணி, தில்லைபுரம், நாமக்கல் – 637001. தொலைபேசி எண் : 04286 – 233 999.

இறைவன்

இறைவன்: ஆஞ்சநேயர்

அறிமுகம்

அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல்லில் உள்ளது. உலக புகழ்மிக்க இந்த ஆஞ்சநேயர் கோயில் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும். இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்கு 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. மேலும் இது இந்தியாவிலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலையாக உள்ளது. இக்கோயில் விஷ்ணு வின் ஒரு அவதாரமான நரசிம்மர், அனுமன் மற்றும் லட்சுமி (இந்துக் கடவுள்) தேவிக்கு காட்சியளித்த இடமாக உள்ளது. இங்கு “ஸ்ரீ வைகானச” ஆகம முறை பின்பற்றப்படுகிறது. 1996ஆம் ஆண்டுவாக்கில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு 1000ஆவது ஆண்டு சம்ப்ரோஷண விழா நடந்தது. இக்கோயில் தமிழ்நாடு அரசு இந்து-அறநிலையத் துறையின் கீழ் பராமரிக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து ஒரு நீர் நிலை அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவம் இயற்றினாள். திரேதா யுகத்தில் இராமவதாரத்தில் இராவணனால் வாரை சேனைகளும், இராமரும் மூர்ச்சையடைந்தனர். அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் இமய மலையை வாயு பகவானின் உதவியுடன் சிரஞ்சீவி மலையை பெயர்த்து வந்து சஞ்சீவி மூலிகைகளால் எழுப்பி விட்டு பழையபடி சஞ்சீவி மலையை வைத்து விட்டு திரும்பினார். அப்போது நேபாளத்தில் கண்டகி நதியில் ஓர் சாலிக்கிராம மலையை பார்த்தார், அதில் ஸ்ரீ நரசிம்மர் ஆவிர் பவித்திருப்பதை கண்ட அனுமான் சாலிக்கிராம மலையை வழிபாட்டிற்காக பெயர்த்தெடுத்து ஆகாய மார்க்கமாக இலங்கை நோக்கி பயனித்தார். சூர்யோதய காலம் நெருங்குவதை கண்ட அனுமன் அனுஷ்டானம் செய்ய தீர்மானித்து மகாலட்சுமி தவம் செய்யும் நீர் நிலைகள் அடங்கிய அந்த இடத்தில் வைத்து விட்டு அனுஷ்டானம் செய்தார். திரும்பி வந்து எடுக்க முயன்ற அனுமன் அதை அசைக்கக் கூட முடியவில்லை. அப்பொழுது ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி ஆஞ்சநேயருக்கு அருள்பாவித்து iராமர் கைங்கரியத்தை முடித்து iராமாவதாரத்திற்கு பின்பு இங்கு பணியாற்றுமாறு உத்தரவிட்டார். பின்பு திரேதா யுகத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரும், கார்கோடகனும் ஆவிர் பவித்து ஸ்ரீ நரசிம்மர் தூணிலும் சாலிக்கிராமத்திலும் இருந்து ஸ்ரீ மகாலட்சுமியின் தவத்திற்காக சாலிக்கிராமகிரி ரூபத்தில் இங்கு எடுத்து வந்து ஸ்தாபிக்கப்பட்டார்.

நம்பிக்கைகள்

முன்பு ஒரு சமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும், சனியும் ஸ்ரீ ஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள். பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்தி படுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும் செய்த வடைமாலையை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி ராகு இவர்களுடைய இடையூறில் இருந்து மனிதர்கள் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துகிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இக் கோயிலில் தட்டையான நுழைவாயில் கோபுரம் உள்ளது. இங்குள்ள 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயரின் சிலை 5ம் நூற்றாண்டில் இருந்து இருப்பதாக நம்பப்படுகிறது. கருவறைக்கு மேலே கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட அமைந்துள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் இடுப்பில் வாளுடனும், சாலிகிராமத்தால் ஆன மாலையும் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்நகருக்கு சுமார் 10 மைல் தொலைவில் அநேக மூலிகைகளும், பல மரங்களும், தானிய வகைகளும் கொண்ட “சதுரகிரி” என்னும் பெருமை வாய்ந்த “கொல்லி மலை” இருக்கிறது

திருவிழாக்கள்

இங்கு ஒரு தினத்தில் நான்கு வேளை பூஜை நடக்கிறது. “கால சந்தி” காலை 8மணிக்கும், “உச்சிகால பூசை” பகல் 12 மணிக்கும், “சாய ரக்ஷை” மாலை 6 மணிக்கும், “அர்த்தஜாம பூசை” இரவு 8.45 மணிக்கும் நடைபெறுகிறது. ஒவ்வொரு பூஜை முறையும் மூன்று படிகளைக் கொண்டது. அவை “அலங்காரம், நைவேத்தியம் மற்றும் தீபாராதனை” போன்றவை ஆகும். மேலும், வார, மாத மற்றும் விஷேச தின வழிபாடுகளும் நடைபெறுகின்றன. பங்குனி-உத்திர திருவிழா தமிழ் மாதமான பங்குனியில் 15 நாட்கள் விமரிசையாகவ்ய்ம் அனுமன் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது நடைபெறுகிறது. இங்கு ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல், எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடை மாலை சாத்துதல், பூ மாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகின்றன. தவிர வெண்ணெய் காப்பு போன்ற சிறப்பு அபிஷேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாமக்கல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாமக்கல்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top