Tuesday Jul 23, 2024

தருமபுரம் யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி

முகவரி

அருள்மிகு யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோவில் தருமபுரம் காரைக்கால் அஞ்சல் புதுச்சேரி மாவட்டம் PIN – 609602

இறைவன்

இறைவன்: தருமபுரீசுவரர்,யாழ்மூரிநாதர், இறைவி: மதுர மின்னம்மை, தேனாமிர்தவல்லி

அறிமுகம்

தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 51ஆவது சிவத்தலமாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.இக்கோயிலின் ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் இடது புறம் தேனாமிர்தவல்லி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். அடுத்துள்ள வாயிலைக் கடந்து செல்லும்போது பலி பீடமும், நந்தியும் உள்ளன. கருவறையில் மூலவர் யாழ்முரிநாதர் லிங்கத்திருமேனியாக உள்ளார். மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, அடிமுடிகாணா அண்ணல், விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் மடப்பள்ளி உள்ளது. தொடர்ந்து விநாயகர், நால்வர், சந்தானாசார்யார், 63 நாயன்மார்கள் உள்ளனர். அடுத்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், காசி விசுவநாதர், சந்திரசேகர், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். இத்திருச்சுற்றில் சூரியன், சந்திரன், பைரவர், நவக்கிரகம் ஆகியோர் உள்ளனர். நடராசர் சன்னதியும் உள்ளது. தீர்த்தம் – தருமதீர்த்தம், பிரம்மதீர்த்தம்.

புராண முக்கியத்துவம்

மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்க எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது. பாண்டவர்களில் தருமன் பூசித்துப் பேறு பெற்றமையினால் இப்பெயர் வந்தது என்றும் கூறுவர். திருஞானசம்பந்தரின் யாழ்முரிப்பதிகம் பெற்ற சிறப்புடையது இத்தலம். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமான இவ்விடத்திற்கு ஒருமுறை சம்பந்தர் வருகை தந்தார். அவருடன் சம்பந்தர் பதிகங்களை யாழில் பாடிவரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் வந்திருந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணரது தாயார் பிறந்த இடமாதலின் திருஞானசம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது, பாணரது சுற்றத்தவர்கள் இவர் யாழ்கொண்டு வாசிப்பதனால் தான் திருஞானசம்பந்தர் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என்று கூறினர். அதைக் கேட்ட பாணர் வருந்தி திருஞானசம்பந்தரிடம் முறையிட்டனர். திருஞானசம்பந்தரும் “மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்” என்று தொடங்கும் பதிகம் பாடினார். திருஞான சம்பந்தரின் இசை திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமல் போக பாணர் யாழையும் உடைக்கச் சென்றார். திருஞானசம்பந்தர் தடுத்து, பாணரை இயன்ற அளவில் வாசிக்கச் சொன்னார். இறைவனும் யாழ்முறிநாதர் என்று பெயர் பெற்றார். சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே நடுவில் ரிஷபாரூடரும், ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பது போலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பது போலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன.

நம்பிக்கைகள்

கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

* இது 208 வது தேவாரத்தலம் ஆகும். * சிவனும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில்கள் திருச்செங்கோடு மற்றும் வாசுதேவநல்லூர் (திருநெல்வேலி) ஆகிய இடங்களில் உள்ளன. சுவாமியின் பாதத்தின் கீழ் தேவதீர்த்தம் உள்ளது. * இத்தலம் 1901 அடி உயரம் கொண்டது. இந்த மலையில் ஏற, 1200 படிகள் உள்ளன. படி ஏற முடியாதவர்கள் கோயில் வரை வாகனத்திலும் செல்லலாம்.

திருவிழாக்கள்

வைகாசி திருவிழா, சிவராத்திரி, திருக்கார்த்திகை

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தருமபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுச்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

புதுச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top