Monday Dec 09, 2024

தக்கோலம் திருவாலீஸ்வரர் திருக்கோயில், வேலூர்

முகவரி

தக்கோலம் திருவாலீஸ்வரர் திருக்கோயில், தக்கோலம், அரக்கோணம் தாலுகா, வேலூர் மாவட்டம் – 631151

இறைவன்

இறைவன்: வாலீஸ்வரர்

அறிமுகம்

சென்னை – அரக்கோணம் சாலையில் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் தக்கோலம் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வூருக்குக் கிழக்கில் திருவாலீஸ்வரம் என்ற சிதைந்த கோயில் உள்ளது. ஆதிஷ்டானத்திலிருந்து கொடுங்கை வரை கருங்கல்லாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டது. விமானம் வட்ட வடிவில் அமைந்துள்ளது.. இதன் கோஷ்டங்களில் சிற்பங்கள் இல்லை. அர்த்த மண்டபத்திற்கு வெளியில் 4 கருங்கல் தூண்கள் கொண்ட திறந்தவெளி மண்டபம் உள்ளது. முதலாம் இராஜேந்திரனுடைய 8ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டே வாலீஸ்வரர் கோயிலின் தொன்மையான கல்வெட்டு என்பதால் கிபி 1020க்கு முன் இக்கோயில் கட்டப்பட்டது உறுதியாகிறது. முதல் இராஜேந்திரனின் தாய் திரிபுவன மாதேவியின் நலம் பொருட்டு நாற்பத்தெண்ணாயிர பிடாரர் கோயிலில் இறைவனுக்கு விஷாகா பாலபிஷேகத்திற்காக 32 பசுக்களை வழங்கியுள்ளார். இறைவன் மகாதேவனாய மும்மலை ஈஸ்வரன் எனவும் ஊர் திருப்பாமுதல் எனவும் வழங்கப்பட்டுள்ளது. கருவறை மேற்குச் சுவரில் விக்கிரசோழனின் கல்வெட்டு (கிபி 1123) உள்ளது. கருவறை வடக்கில் உள்ள கல்வெட்டு முன்றாம் இராஜேந்திரன் காலத்தது ஆகும். உமேசுர தேவன் விநாயகர் போன்றோருக்கு செப்புப் படிமங்கள் எடுத்து வழிபாட்டுக்கு மன்னன் கொடை வழங்கிய விவரம் கல்வெட்டில் உள்ளது. ஊர் குலோத்துங்க சோழபுரம் என்றும் இக்கல்வெட்டில் கூறப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தக்கோலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

அரக்கோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top